கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 50,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த பைசூல்ராணி மீது தொடர்ந்து லஞ்சம் புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கணக்கில் வராத சுமார் 1 லட்சத்து 59 ஆயிரத்து பணத்தை பறிமுதல் செய்து பைசூல்ராணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.