டெல்லியில் வரும் 22-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் நடைமுறையை ஜிஎஸ்டி கவுன்சில் கண்காணித்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற 52-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இணையவழி சூதாட்டம், குதிரைப் பந்தயத்துக்கு 28 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், 53-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், வரும் 22-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலில் அங்கம் வகிக்கும் பிற மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.