தேர்தலில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்பதற்காகவே அமித்ஷா தம்மை அழைத்ததாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆந்திர முதலமைச்சர் சந்திபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதன்முதலாக சந்தித்தாகவும் கூறினார்.
அப்போது, அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியதாகவும், தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கவே இந்த விளக்கம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.