ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை காட்டி தொழிலதிபர்களிடன் பணம்பறித்த வடமாநில கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வடமாநிலத்தை சேர்ந்த 10 இளைஞர்கள் ஹைதராபாத்தில் வசிக்கும் தொழிலதிபர்களுடன் டேட்டிங் செயலி மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை காட்டியுள்ளனர்.
அவர்களின் வலையில் சிக்கிய சில தொழிலதிபர்களை மாதாப்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வரவழைத்த கும்பல் அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் புகாரளித்த நிலையில் வடமாநில கும்பலை சேர்ந்த 7 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.