மதுரையில் உடைந்த கதவுடன் இயக்கப்படும் அரசுப் பேருந்தால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மதுரையில் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் ஏராளமான அரசுப் பேருந்துகள் பழுதடைந்து காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மேலூரில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்தின் பின்பக்க கதவு உடைந்த நிலையில் உள்ளது. போக்குவரத்துத் துறையின் இந்த அலட்சியப் போக்கால் விபத்து நேரிடம் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.