அருணாச்சல பிரதேசத்தில் பல இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியதற்குப் பதிலடியாக, திபெத்தில் உள்ள 30 இடங்களில் மறு பெயர் சூட்டும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சீனாவின் அடாவடி செயலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதிலடி கொடுத்து இருப்பது குறித்து, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…
இந்தியாவின் வடகிழக்கே உள்ள மாநிலமான அருணாசல பிரதேசம் சீனாவின் எல்லையையொட்டி இருக்கிறது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா, அருணாசல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.
1962ஆம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். அவர்களின் நினைவாக வாலாங் நகரத்தில் போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய அரசு காஹு கிராமத்தை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது. மேலும் சுற்றுலா விடுதிக்கு அருகில் புதிய ராணுவப் பாலமும் கட்டப்பட்டுள்ளது.
இந்தியா – சீனாவுக்கும் இடையே பொதுவான எல்லைக்கோடு இல்லாத நிலையில்,
கடந்த 2023ஆம் ஆண்டு சீனா நமது நாட்டின் இறையாண்மையைக் குறிவைத்து ஓா் எல்லை வரைபடத்தை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவின் பகுதிகளான வடக்கிலுள்ள லடாக், கிழக்கிலுள்ள அருணாசல பிரதேசம் ஆகியவற்றை சீனா தனக்குச் சொந்தம் என குறிப்பிட்டிருந்தது.
மேலும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் சுமார் 30 இடங்களுக்கு மறு பெயர் சூட்டும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஆனால், சீனப் பெயர்களை உள்ளூர் மக்கள் எதிர்ப்பதாகவும், மறு, பெயர் பட்டியலுடன், எல்லை கட்டுப்பாட்டு பகுதியை வரையறுக்கும் இந்தியாவின் புதிய வரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சீனா, கடந்த மார்ச் மாதம் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் மறுபெயர் சூட்டியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 3வது முறையாக பதவியேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
திபெத்தின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, இந்தியா – சீனா இடையிலான பிரச்னை மேலும் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.