தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பரிசல் ஓட்டிகள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகேனக்கலில் கடந்த மூன்று மாதங்களாக பரிசல் நிறுத்துமிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இதனால் கூடுதலாக மூன்று மாதங்கள் தங்களுக்கு பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், பரிசல் ஓட்டிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து, சில அரசியல் பிரமுகர்களுக்கு ஆதரவாக பரிசல் துறைக்கு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பரிசல் ஓட்டிகள், தொடர்ந்து 2-வது நாளாக பரிசல்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.