புதுச்சேரி பிரபல பெண் தாதா எழிலரசி அவரது கணவர் ஆகியோர் காரைக்கால் மாவட்டத்தில் நுழைய மூன்றாவது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
144 தடை சட்டத்தின் கீழ் 2 மாதம் காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்து, துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவகுமார் கொலை வழக்கில் இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.