தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசை என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் கர்ப்பமடைந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அம்மாவாசை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் அம்மாவாசை குற்றவாளி என்றும், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.