ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியில் பள்ளி ஆசிரியர் வீட்டின் மாடியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதனப்பள்ளியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் துரைசாமி என்பவர் இரவில் வீட்டின் மாடியில் படுத்துறங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் தலை மீது பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் துரைசாமி கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்திருக்கலாம் என அவரது மகள் ஹரிதா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஹரிதாவிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.