மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெற்ற ரோட் ஷோவில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சராக பதவியேற்ற பின்னர், அவர் முதல் முறையாக போபாலுக்கு சென்றார். அவருக்கு பாஜக தொண்டர்கள், மலர்கள் தூவி, மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், கிராமப்புற வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முன்னுரிமை கொடுத்துள்ளார் என தெரிவித்தார். மேலும், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா போன்ற திட்டங்கள் நாட்டின் கிராமப்புற நிலப்பரப்பை மாற்றியுள்ளன என்றும் தெரிவித்தார். டெல்லியில் இருந்த போபாலுக்கு ரயிலில் சென்ற அவரிடம் ஏராளமானோர் செல்பி எடுத்துக்கொண்டனர்.