அமெரிக்காவின் மிச்சிகனில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர்.
மிச்சிகனின் டெட்ராய்ட் அருகே உள்ள குழந்தைகள் நீர் பூங்காவில் ஏராளமானோர் பொழுதை கழிப்பதற்காக குவிந்திருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுற்றியிருந்தோர் மீது கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதில் 2 குழந்தைகள் உட்பட காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.