பேடிஎம் நிறுவனத்திடமிருந்து திரைப்பட டிக்கெட் விற்பனை பிரிவை சொமேட்டோ நிறுவனம் கையகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள பேடிஎம் நிறுவனம், தமது திரைப்பட டிக்கெட் வணிகத்தை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொமேட்டோ நிறுவனத்திடம் விற்பனை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிள்ளது.
இது குறித்த முறையான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.