மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் 200 அடி இறங்கி, தண்ணீர் எடுக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சோல்முக் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்தக் கிராம பெண்கள், கிணற்றின் பக்கவாட்டு கைப்பிடியைப் பிடித்தவாறு, உயிருக்கு ஆபத்தான நிலையில் 200 அடி வரை இறங்கி, தண்ணீர் எடுக்கும் அவலநிலைக்கு ஆளாகி இருக்கின்றனர்.
அதுவும் மாசுபடிந்த தண்ணீராகவே வருவதால், பல்வேறு உடல் உபாதைகளுக்கும் தாங்கள் ஆளாகி வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.