நாடாளுமன்ற வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட காந்தி சிலைக்குத் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
காந்தி சிலை மாற்றி அமைக்கப்பட்டதற்கான தகவல் பலகையைக் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் திறந்துவைத்தார்.
பின்னர், காந்தி சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அஸ்விணி வைஷ்ணவ், அர்ஜுன்ராம் மேக்வால், எல். முருகன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து லாலா லஜபதி ராய், பசவேஸ்வரா, மோதிலால் நேரு, மகாராஜா ரஞ்சித் சிங் ஆகியோரது சிலைகளுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.