தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆன்மீக பயணம் செல்பவர்களின் வசதிக்காக, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் தினசரி 400 பேர் வரை திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.