புதுச்சேரியில் மூன்று கோயில்களில் புகுந்து தங்க நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியில் கடந்த 31-ம் தேதி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட 3 கோயில்களில் சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள், உண்டியலில் இருந்த பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த சுகுன்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் பதுங்கியிருந்த சுகன்ராஜை கைது செய்த போலீசார், திருடுபோன நகைகளை மீட்டனர்.