சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடர்பட்ட வழக்கில் சி.ஐ.டி. போலீசார் முன்பு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆஜரானார்.
இதுதொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் எடியூப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனிடையே முன்ஜாமீன் வழங்கக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து சி.ஐ.டி. போலீசார் முன்பு எடியூரப்பா இன்று ஆஜரானார்.