டெல்லியில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை சந்தித்து செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சராக சர்பானந்தா சோனோவால் பதவியேற்ற நிலையில், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்பானந்தா சோனோவாலின் அர்ப்பணிப்பு உணர்வும், தலைமைப் பண்பும் பாராட்டுக்குரியது என எக்ஸ் தளத்தில் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.