நீலகிரியில், கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்து சென்ற புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உலா வருகின்றன. இந்த நிலையில், மசினகுடி சாலையில் புலி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது.
இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து கண்டு ரசித்தனர். மின்னல் வேகத்தில் சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.