அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மூட நம்பிக்கையால், பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து தாத்தாவே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உட்கோட்டை பகுதியை சேர்ந்த வீரமுத்து – ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதாவிற்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 14ஆம் தேதி ‘குழந்தை காணவில்லை என தாய் சங்கீதா தேடியபோது, வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் இறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சித்திரை மாதம் குழந்தை பிறந்ததால் குடும்பத்திற்கு ஆபத்து என கூறி குழந்தையை கொன்றதாக குழந்தையின் தாத்தா வீரமுத்து ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.