மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர் மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமூகத்தினா், பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனா்.
இதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மணிப்பூர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் தபன் டேகா, மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங், முன்னாள் சிஆர்பிஎஃப் தலைவரும், மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகருமான குல்தீப் சிங், மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டார்.