மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நிகழாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் மகாராஷ்டிரா தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்தர் யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லவ் குமார் தேவ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.