காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் குடும்பத் தகராறு காரணமாக பெண் காவலரை அவரது கணவர் அரிவாளால் வெட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் விஷ்ணுகாந்தி காவல் நிலைய தலைமை காவலர் டில்லி ராணி, கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் சங்கரமடம் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு டில்லி ராணி சென்றபோது, கணவன் மேகநாதன் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால், மனைவி டில்லி ராணியின் கைகளை வெட்டிவிட்டு மேகநாதன் தப்பிவிட்டார். அக்கம் பக்கத்தினர், டில்லி ராணியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு டில்லி ராணி அனுப்பி வைக்கப்பட்டார்.