பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் பிறந்த நாளையொட்டி, ராணுவ விமானத்தின் விமானி அறையிலிருந்து லண்டனில் எடுக்கப்பட்ட கண்கவர் வீடியோ பதிவை விமானப் படை வெளியிட்டுள்ளது.
அதன்படி சிவப்பு நிற புகையை கக்கியவாறு மூன்று விமானங்கள் வானில் வட்டமிட்டன. மற்றொரு விமானத்தில் விமானி அறையிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ பதிவில், லண்டனின் முக்கிய சுற்றுலா தளமான லண்டனின் கண் என்று வர்ணிக்கப்படும் ராட்சத ராட்டினம், பிக் பென் கடிகாரம் மற்றும் பேட்டர்ஸீ அனுமின் நிலையம் ஆகியவை பதிவாகியுள்ளன.