நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வாஞ்சிநாதனின் செயல் போற்றுதலுக்குரியது என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் உயிர் நீத்த நாளில், தேசம் நன்றியுடனும் பெருமையுடனும் அவரை நினைவுகூர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாததால், நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் ஆஷை படுகொலை செய்து, தன்னைதானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டவர் வாஞ்சிநாதன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேச சுதந்திரத்தின் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேர தூண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.