திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தர்கள் குடும்பத்துடன் மணல் குளியலிட்டு மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடி செல்வது வழக்கம்.
இந்நிலையில் விடுமுறை நாட்களையொட்டி திருச்செந்தூர் கோயிலுக்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த பக்தர்கள், கடற்கரை மணலை உடலில் பூசிக்கொண்டும், உடலை மணலுக்குள் மறைத்தப்படி சிறிது நேரம் இருந்துவிட்டு பின்னர் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், மணல் சூரிய குளியல் எலும்புகளை வலுப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதாக தெரிவித்தார்.