திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு வழிபட்டார்.
திருப்பதி மலையில் இரவு தங்கி கோயிலுக்கு சென்ற நடிகர் அஜித், சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.
சுவாமி தரிசனத்துக்குப் பின், அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பட்டு வேஷ்டி சட்டையுடன் வந்த அஜித், அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.