ஜெகன் ஆடிய ஆட்டம்: அரசு பணம் 500 கோடியில் ஆடம்பர சொகுசு மாளிகை!
Nov 15, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெகன் ஆடிய ஆட்டம்: அரசு பணம் 500 கோடியில் ஆடம்பர சொகுசு மாளிகை!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக அரசு செலவில் கட்டப்பட்ட ஆடம்பர மாளிகையின் வீடியோவை தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில்,தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான காந்தா ஸ்ரீனிவாஸ், விசாகப் பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டாவில் முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்டியுள்ள பிரம்மாண்டமான ஆடம்பர மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார்.

தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மக்களுடன் சென்ற அவர், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆடம்பர மாளிகையின் போட்டோக்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துள்ளார்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்காக அரசு செலவில் கட்டப்பட்ட இந்த சொகுசு மாளிகை சுமார் 500 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் கடற்கரை அருகே, ருஷி கொண்டா மலைகளின் நடுவே இந்த ஆடம்பர மாளிகை அரசு செலவில் கட்டுப்பட்டு வந்தது. மீண்டும் முதல்வர் ஆன பின், பிரஜா வேதிகா என்ற பெயரில், முகாம் அலுவலகமாக இந்த ஆடம்பர மாளிகையைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு அலுவலகம் என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் , ஜெகன் மோகன் ரெட்டியின் ஆடம்பர மாளிகையாகவே மக்களால் பார்க்கப் படுகிறது. பாதுகாப்பு காரணமாக , இதுவரை இந்த மாளிகைக்குள், யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அப்படியென்ன பிரம்மாண்டம் என்று கேட்கலாம்? தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய மாளிகை இதுவாகும்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த கிரானைட்கள், பளபளக்கும் கண்ணாடிகள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பாத் டப் எனப்படும் குளியல் தொட்டிக்கு மட்டும் 26 லட்சம் ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளது.

முதல்வர் முகாம் அலுவலகம் என்ற பெயரில், மக்களின் வரிப்பணம் சுமார் 500 கோடி ரூபாயை முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீணடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் , அரண்மனை போன்ற இந்த பிரஜா வேதிகா என்ற கட்டிடம் , அனைத்து அரசு விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆடம்பர மாளிகை குறித்து, விரைவில் முறையான விசாரணை செய்யப்படும் என்றும், இந்த மாளிகையை வேறு எதற்கு பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.

இதற்கிடையே,ஹைதராபாத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில், நடை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப் பட்டுள்ளன. தங்களுக்கு இடையூறாக இருப்பதாக மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Game played by Jagan: Government money 500 crore luxury mansion!
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் பலி!

Next Post

நாளந்தா பல்கலைக்கு உயிரூட்டப்பட்டது எப்படி?

Related News

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies