கேரளாவில் சாலையைக் கடந்து சென்ற காட்டு யானை, காரை தும்பிக்கையால் தட்டி விட்டுச் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலப்புரம் மாவட்டத்திலுள்ள நாடுகாணி மலைப்பாதையில், வனவிலங்குகள் இரவு நேரத்தில் அதிக அளவில் உலா வருகிறது.
இந்நிலையில், ஒரு குட்டி யானை உள்பட நான்கு காட்டு யானைகள் சாலையைக் கடந்து சென்றது. அப்போது அவ்வழியாகச் சென்ற காரை, காட்டு யானை ஒன்று தும்பிக்கையால் தட்டியது. இதில் காரில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.