திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் ஊராட்சியில் ‘‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் ’’ திட்டத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் பெயரளவில் மட்டுமே இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் ஊராட்சிகளில் தங்கி 24 மணி நேரத்தில் பொதுமக்களின் குறைபாடுகளை தீர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் ஊராட்சிகளில் தங்கி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் காலை 9.30 மணிக்கு வந்துவிட்டு 2 மணி நேரத்திலேயே புறப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இரவு தங்காமல் வெளியில் சென்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி மக்கள் கோரிக்கைகள் குறித்த பணிகளில் அதிகாரிகளின் செயல்பாடுகள் பெயரளவில் மட்டுமே இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.