நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவையொட்டி வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி நெல்லையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 7ம் நாளில் சிவப்பு சாத்து திருக்கோலத்தில் நடராஜ பெருமானும், வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி நெல்லையப்பரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.