டெல்லியில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ள மத்திய சுகாதாரத் துறை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் எளிதில் அணுகும் விதத்தில், சேவை மனப்பான்மையோடு செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களில் நிலவும் வெப்ப அலை பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறிய ஜெ.பி.நட்டா, இது குறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் உரிய அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நீர் ஆகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், நீர் இழப்பை போக்க தண்ணீர் அதிகம் பருக வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா வலியுறுத்தினார்.