10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 10வது யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு யோகா பயிற்சிகள் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு யோகா பயிற்சியை மேற்கொண்டார்.
இதேபோன்று, டெல்லி தியாகராஜ் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பி.எல்.வர்மா மற்றும் பிரல்ஹத் ஜோஷி ஆகியோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
டெல்லியில் மற்றொரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் குமாரசாமி கலந்து கொண்டு பயிற்சியை மேற்கொண்டார்.
டெல்லி கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
டெல்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் லடாக்கின் லே பகுதியில் உள்ள கர்னல் சோனம் வாங்சுக் மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, கிழக்கு லடாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நாட்டின் வடக்கு எல்லையில் பனி படர்ந்த உயரமான பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கடற்படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்ட ட்ரோன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.