காரைக்காலில், சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா வந்தபோது, பக்தர்கள் மாங்கனிகளை வீசி எறிந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவ மூர்த்தி சுவாமிக்கு மாங்கனியை வழங்கியதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாங்கனித்திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்தாண்டும், காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா, கடந்த 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில், சிவபெருமான் பிச்சாண்டவராக எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
அப்போது, ஓம் நமச்சிவாய என்ற கோசங்கள் எழுப்பியபடி, பக்தர்கள் மாங்கனிகளை வீசி எறிந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.