கிரிக்கெட் போட்டிகளில் அசத்தும் பும்ராவின் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் கவர் போட்டோவாக வைத்து ஐசிசி பெருமை சேர்த்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வரும் பும்ரா டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் அசத்தி வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முதல் இடத்தை பிடித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கவர் போட்டோவாக பும்ராவின் புகைப்படத்தை வைத்து பும்ராவுக்கு பெருமை சேர்த்துள்ளது.