ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்றக் காவல் ஜூலை 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அவரது காவல் நிறைவடைந்ததால், அவரை காணொலி வாயிலாக நீதிபதி முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது பிபவ் குமாரின் நீதிமன்றக் காவலை ஜூலை 6-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் மே 18-இல் பிபவ் குமாரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.