மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து மரக்கட்டையால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தார் மாவட்டத்தில் அரங்கேறிய இந்த சம்பவத்தின்போது, தாக்கப்படும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல் பலரும் வீடியோ எடுப்பதிலே கவனம் செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நிர்சிங் என்பவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.