மதசார்பற்ற ஜனதா தள தொண்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரஜ் ரேவண்ணா தனது மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தொண்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் ஹோலேநரசிபுரா போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், அவரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்தத் தகவலை ஹாசன் எஸ்பி முகமது சுஜிதா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக போலீஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கெனவே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்
சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் பிரஜ்வால் ரேவண்ணா கைதான நிலையில், தற்போது சூரஜும் கைதாகி இருப்பது கர்நாடக அரசியல் அரங்கில் புயலை கிளப்பியுள்ளது.