குஜராத்தில் அரிவாள் ரத்த சோகை நோய்க்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரத்தை அந்த மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
ரத்தத்தின் ஹீமோகுளோபினில், குளோபின் புரதச் சங்கிலியில் ஏற்படும் மாற்றத்தால் அரிவாள் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. அந்த வகையில், குஜராத் முழுவதும் 65 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
உலகம் முழுவதும் அரிவாள் ரத்த சோகை நோய் ஜூன் 19-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, குஜராத்தின் மாண்ட்வி தாலுகாவில் தொடங்கிய விழிப்புணர்வுப் பிரசாரம், ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.