அமெரிக்காவின் ‘‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’’ பாலத்தில் விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 8 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
பால்டிமோர் நகரில் உள்ள படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ என்ற மிகப்பெரிய பாலம் உள்ளது. இப்பாலத்தில் கடந்த மார்ச் மாதம் டாலி என்ற சரக்கு கப்பல் பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.
20 இந்திய மாலுமிகளை கொண்ட இந்த கப்பல் 3 மாதங்களாக அதே இடத்தில் இருந்து வந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 மாலுமிகள் தாயகம் திரும்பிக் கொள்ளலாம் எனவும் 12 மாலுமிகள் விசாரணைக்காக அமெரிக்காவில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.