வேலூர் தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பான மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன்ராம்மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள எக்ஸ் தள பிதிவில், வேலூர் தொழில்நுட்பக் கழகத்தில் (விஐடி) குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கு பாதை குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் பாக்கியம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதில் மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம்மேக்வால் , சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஸ்ரீ ஆர். மகாதேவன் , கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஸ்ரீ ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் மற்றும் தெலுங்கானா தலைமை நீதிபதி ஸ்ரீ அலோக் ஆராதே கலந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.