கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் புதிய சட்டங்கள் அவசியம் தேவை என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேலூர் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கு பாதை என்ற மாநாடு தொடக்க விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடி ஆட்சியில், காலணி ஆதிக்க காலத்தி்ல் கொண்டு வந்த சட்டங்களை மாற்றி, வரலாற்று சிறப்புமிக்க மூன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
விழால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மற்றும் சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் டாக்டர்.ராஜீவ் மணி, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய், தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.