காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டைப்போக்க உச்சநீதிமன்றத்தை நாடிய டெல்லி அரசு, அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
டெல்லி அரசின் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீர் திறக்க வேண்டும் என ஹரியானா அரசுக்கு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீர் திறந்தவிடாத ஹரியானா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, கடந்த 21ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
5ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது அமைச்சர் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.