டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 205 ரன்களை குவித்தது.
206 ரன்களை இலக்காக கொண்டு ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அரைஇறுதிக்குள் கால் பதித்தது.