“மற்ற இசை வெளியீட்டு விழா போல் இல்லாமல், இந்த இசை விழா சிறப்பாக இருந்தது” என பாசுரங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள பாசுரங்கள் வெளியிடப்பட்டது.
பின்னர் நிகழ்ச்யில் பேசிய இளையராஜா, “அன்பான உள்ளங்களை சந்திப்பதும், இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் பல்லாண்டு பல்லாண்டு நீண்டு கொண்டே போக வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்தார். மேலும், “திவ்ய பிரபஞ்சத்திற்கும் இசையமைக்க வேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இளையராஜா கூறினார்.