புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
அம்மன்குறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் பசுமாடு, சின்னையா என்பவரின் வயலுக்கு மேய்ச்சலுக்காக சென்றது.
அப்போது வயலில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைத்தனர்.