மக்களவை தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மக்களவை தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கோரி, காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தலைவர் பதவிக்கு இதுவரை தேர்தல் நடத்தப்பட்டதில்லை என்றும், அந்தப் பதவிக்கு காங்கிரஸும் போட்டியிடுவது வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.