மக்களவைத் தலைவர் விவகாரத்தில் காங்கிரஸ் நிபந்தனை விதிப்பது ஏற்கத்தக்கது அல்ல என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் மக்களவைத் துணைத் தலைவர் பதவி பற்றி விவாதித்துவிட்டு, தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம் என காங்கிரஸ் நிபந்தனை விதித்ததை தாங்கள் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தலைவர் என்பவர் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவர் அல்ல என்றும், அவர் ஒட்டுமொத்த அவைக்கும் உரியவர் என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
அதேபோல் மக்களவைத் துணைத் தலைவரும் கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், அவர் கட்சி சார்பு உடையவராக இருந்தால் மக்களவை மரபுக்கு உகந்ததாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.