கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 60 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது.
தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சடையன், சிவகுமார், பன்சிலால், கௌதம், ரவி, செந்தில், ஏழுமலை ஆகிய 7 பேரை
போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.